Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் கணினி பயன்பாடு தொடர்பான போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் கணினி  பயன்பாடு தொடர்பான போட்டிகள்

    By DIN  |   Published on : 29th March 2017 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில், கணினி பயன்பாடு தொடர்பான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
    இதில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, தனி அலுவலர் டி.பிரபு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினித் துறை தலைவர் டி.கார்த்திகேயன் வரவேற்றார்.
    குடியாத்தம் கே.எம்.ஜி கலைக் கல்லூரி கணினித் துறைப் பேராசிரியர் எல்.சங்கர்கணேஷ் கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைய கணினி மயமான உலகில் கணினி சார்ந்த அறிவு மற்றும் பயன்பாட்டின் தேவை பன்மடங்கு வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு கணினி பயன்பாட்டின் தேவை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கணினியின் பயன்பாடு மற்றும் நுண்ணறிவு என்ற தலைப்பில்  இங்கு நடைபெறும் போட்டிகள் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
    இதுபோன்ற போட்டிகளை மற்ற கல்லூரிகளும் நடத்த வேண்டும். வரும் ஆண்டில் கணினித் துறை சார்ந்த 10 லட்சம் பொறியாளர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவர் என்றார்.
    இதில் திறன் வளர்ப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். பேராசிரியர் என்.கார்த்திக் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai