Enable Javscript for better performance
போலீஸாரின் விழிப்புணர்வைத் தொடர்ந்து 16 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாரின் விழிப்புணர்வைத் தொடர்ந்து 16 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 29th March 2017 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் பகுதியில் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து 16 நாட்டுத் துப்பாக்கிகளை ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஒப்படைத்தனர்.
    செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தில் கடந்த 20-ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மானை வேட்டையாட முயன்றாராம்.
    அப்போது, குறி தவறி அந்தப் பகுதியில் காட்டுக் கிழங்குகளை தோண்டிக்கொண்டிருந்த செல்வம் என்பவர் மீது குண்டு பாய்ந்ததாகத் தெரிகிறது.
    இதில் பலத்த காயமடைந்த செல்வம், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி சின்னத்தாய் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீஸார் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
    இதனிடையே, தீத்தாண்டப்பட்டு பகுதியில் மேலும் சிலர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் வனப் பகுதியில் வேட்டைக்குச் செல்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா, தலைமை ஆய்வாளர் நிலவழகன் மற்றும் போலீஸார், தீத்தாண்டப்பட்டு கிராமத்துக்கு கடந்த 25-ஆம் தேதி சென்றனர்.
    பின்னர், அந்தப் பகுதி மக்களிடம் விவசாயி கிருஷ்ணன் தவறுதலாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு  குறித்தும், அதனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும் தெரிவித்தனர்.
    மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்துவிட்டால், அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு  செய்யப்படாது.
    போலீஸார் சோதனை நடத்தி, துப்பாக்கிகளை பறிமுதல் செய்தால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
    இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் தாங்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை
    செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai