சுடச்சுட

  

  மாவட்ட எக்ஸ்னோரா சார்பில் பசுமைத் திட்டங்கள் செயலாக்க விழா

  By DIN  |   Published on : 29th March 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா சார்பில், பசுமைத் திட்டங்கள் செயலாக்க விழா நடைபெற்றது.
  விழாவுக்கு சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.மண்ணுலிங்கம், மாவட்ட உணவகங்கள் சங்கத் தலைவர் அ.சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாவட்ட எக்ஸ்னோரா செயலர் ஆர்.வெங்கடேச பெருமாள் வரவேற்றார். விழாவில், எக்ஸ்னோரா செனட்டர் சு.இந்திரகுமாருக்கு சுற்றுச் சூழல் செயல் வீரர் விருதை சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் வழங்கினார். இதையடுத்து, சு.இந்திரகுமார் பேசியதாவது:  
   என்னுடைய வீட்டில் மழைநீர் சேமிப்பு, மாடியில் காய்கறித் தோட்டம், இயற்கை உரம் தயாரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தல், மின் சிக்கனம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறேன்.
  இத்துடன், கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள், இல்லத்தரசிகள், விவசாயிகளுக்கு இலவசமாக மேற்கண்ட பசுமைத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறேன்.
  இவ்வாறு செய்வதன் மூலம் பூமி வெப்பமயமாவதைத் தடுக்கலாம் என்றார். இதைத் தொடர்ந்து, மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்த படக்காட்சி காண்பிக்கப்பட்டது.
   நிகழ்ச்சியில், வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் மா.சின்ராஜ், மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கத்தின் மண்டலத் தலைவர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் சிவக்குமார், எக்ஸ்னோரா நிர்வாகிகள் ஜி.எம்.முத்து, பொறியாளர் எஸ்.சிவசங்கரன், கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai