சுடச்சுட

  

  அருணாசலேஸ்வரர் கோயில் அபிஷேக கட்டணம் உயர்வு: மதிமுக கண்டனம்

  By DIN  |   Published on : 30th March 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அபிஷேக கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
  திருவண்ணாமலையில் கோட்ட அளவிலான மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பாசறை பாபு வரவேற்றார்.
  மாநில கொள்கை பரப்புச் செயலர் பொடா க.அழகுசுந்தரம், மாவட்டச் செயலர் ஆரணி டி.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
  கூட்டத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாத்தனூர் அணையை தமிழக அரசு உடனே  தூர்வார வேண்டும். திண்டிவனம் - நகரி இடையிலான அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் மார்ச் 27 முதல் அபிஷேகக் கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது. கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இதில், மாவட்டப் பொருளாளர் ப.உதயசங்கர், திருவண்ணாமலை நகரச் செயலர் டி.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai