சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே கடைக்குச் சென்றபோது காணாமல்போன பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலையை அடுத்த களர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி முருகன் (30). இவரது மனைவி தேவி (30). இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    சில தினங்களுக்கு முன்பு கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற தேவி, மீண்டும் வீடு திரும்பவில்லையாம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் முருகன் புதன்கிழமை புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல்போன தேவியை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai