சுடச்சுட

    

    கற்றலில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் செய்ய ஆலோசனை

    By DIN  |   Published on : 30th March 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் செய்வது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு வட்டார வள மையத்தில் கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் பி.சுப்ரமணியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அ.வெங்கிடேசன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தே.ரங்கநாதன், கோ.வெங்கடேசன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
    கூட்டத்தில், ஒவ்வொரு பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், கணித அடிப்படை செயல்பாடுகளில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் செய்வது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai