சுடச்சுட

  

  வந்தவாசி அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
  விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கள்ளப்புளியூர் கசக்காள் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழமலை (57). இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் வந்தவாசியை அடுத்த பூங்குணம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. கிணற்றில் பாறை இருந்ததால் அந்தப் பாறைகளை வெடி மூலம் தகர்த்துத் தருமாறு கண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தோட்டா வாகன உரிமையாளர் குமரன்
  (35) என்பவரிடம் ஏழுமலை கூறியிருந்தாராம்.
  இதையடுத்து, கிணற்றில் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் குமரன் ஈடுபட்டாராம். இதில் 2 வெடிகள் மட்டும் வெடிக்காமல் இருந்துள்ளது. இதனால் புதன்கிழமை இந்த இரண்டு வெடிகளையும் வெடிக்க வைப்பதற்காக குமரன் கிணற்றுக்குள் இறங்கி அதற்கான வயர்களை இணைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக வெடிகள் வெடித்ததில் பலத்த காயமடைந்த குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தேசூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமரனுக்கு மனைவி,
  2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai