சுடச்சுட

  

  கிரிவலப் பாதையில் புளிய மரங்களை வெட்டுவதாக புரளி பரவியதால் பரபரப்பு

  By DIN  |   Published on : 30th March 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் ஸ்ரீரமணாஸ்ரமம் அருகே உள்ள கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறையினரால் புதன்கிழமை கருவேல மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், புளிய மரங்கள் வெட்டப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  நீதிமன்ற உத்தரவின்படி திருவண்ணாமலை, ஸ்ரீரமணாஸ்ரமம் அருகே சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர். ஆனால், கிரிவலப் பாதையில் புளிய மரங்கள் வெட்டப்படுவதாக சமூக ஆர்வலர்களிடையே தகவல் பரவியது.
  மேலும், கிரிவலப் பாதையில் மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டுவதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவுக்கு சிலர் புகார் தெரிவித்தனர்.
  இதையடுத்து, ஆட்சியர் நடத்திய விசாரணையில், வெட்டப்பட்டது புளிய மரங்கள் அல்ல, சீமைக் கருவேல மரங்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. புரளி காரணமாக அந்தப் பகுதியில் பொதுமக்களும் திரண்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai