Enable Javscript for better performance
செய்யாறில் இன்று சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் இன்று சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 30th March 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு கோட்ட அளவிலான சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் சார் - ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
    கூட்டத்துக்கு சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை வகிக்கிறார். இதில், சென்னை இந்தியன் ஆயில் நிறுவன முதன்மை வட்டார மேலாளர், வேலூர் மண்டல பொது மேலாளர், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விநியோக அதிகாரிகள் மற்றும் கோட்டத்தைச் சேர்ந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
    மேற்படி வட்டங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு தொடர்பான தங்களது குறைகளை இந்தக் கூட்டத்தில் நேரடியாகவும், புகார் மனுவாகவும் அளித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai