Enable Javscript for better performance
செய்யாறு சுகாதார மாவட்டத்தில்  90,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு சுகாதார மாவட்டத்தில்  90,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 30th March 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 90,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமின் முதல் சுற்று ஏப்ரல் 2-ஆம் தேதியிலும், இரண்டாம் சுற்று ஏப்ரல் 30-ஆம் தேதியிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமின்போது, பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள 90,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
    வெளியூர்களிலிருந்து வந்து தாற்காலிகமாக வசித்து வரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள், கட்டட வேலை, சாலை அமைத்தல், நரிக்குறவர் வகைப்பட்ட நிரந்தர குடியிப்பு இல்லாதவர்கள் ஆகியோரை கணக்கெடுத்து, அவர்களுடன் வசித்து வரும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும், இந்தக் குழந்தைகள் விடுபடாமல் இருக்க 8 நடமாடும் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஆரணி, மேற்குஆரணி, பெரணமல்லூர், வெம்பாக்கம், அனக்காவூர், செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு ஆகிய ஒன்றியங்களிலும், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பல இடங்களில் 739 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    இந்த முகாமில் 717 அங்கன்வாடி பணியாளர்கள், 368 பொது சுகாதாரத் துறை பணியாளர்கள், 1,888 தன்னார்வ பணியாளர்கள், 151 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து போட்டு இருந்தாலும், தற்போது மீண்டும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai