சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் இன்று முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

  By DIN  |   Published on : 30th March 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
  திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரர்களின் குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
  இதைத் தொடர்ந்து, முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் (சுய வேலை வாய்ப்பு) கருத்தரங்கமும் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகிக்கிறார். முப்படை வீரர் வாரியத்தின் துணைத் தலைவர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், நபார்டு வங்கி மேலாளர், ஸ்டேட் வங்கி மேலாளர், இந்தியன் வங்கி மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர், மாவட்டத் தொழில் மைய அலுவலர், தாட்கோ மாவட்ட மேலாளர் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
  கூட்டத்தில், முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடனுதவித் திட்டங்கள், மறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்த விளக்கவுரை அளிக்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களைச் சேர்ந்த விதவையர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai