Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சல் எதிரொலி: செங்கம் அருகே சுகாதாரத் துறையினர் துப்புரவுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    மர்மக் காய்ச்சல் எதிரொலி: செங்கம் அருகே சுகாதாரத் துறையினர் துப்புரவுப் பணி

    By DIN  |   Published on : 30th March 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே உள்ள கிராமங்களில் மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் அருகிலுள்ள கிராமங்களில் சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

    செங்கத்தை அடுத்த சாமந்திபுரம், அண்டப்பேட்டை ஆகிய கிராம மக்களுக்கு அண்மையில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தக் கிராமங்களில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தப் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    இந்நிலையில், அந்தக் கிராமங்களுக்கு அருகிலுள்ள பிஞ்சூர், சின்னபிஞ்சூர் ஆகிய கிராமங்களில் மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை வீடுவீடாகச் சென்று கழிவுநீர் தேங்கியுள்ளதா, குடிநீரில் கழிவுநீர் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அந்தக் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின் விசை மோட்டாருடன் கூடிய குடிநீர்த் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    மேலும், பிஞ்சூர், சின்னபிஞ்சூர் கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேங்காய் மட்டை, சைக்கிள், லாரி டயர்களில் மழைநீர் தேங்கியுள்ளதா எனவும் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும் என மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai