Enable Javscript for better performance
ஆரணி நகராட்சிக் கடைகளுக்கு வாடகையை குறைக்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி நகராட்சிக் கடைகளுக்கு வாடகையை குறைக்கக் கோரி மனு

    By DIN  |   Published on : 31st March 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி நகராட்சிக் கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்கக் கோரி, நகராட்சி ஆணையாளரிடம் வியாழக்கிழமை ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    ஆரணி நகராட்சிக்குச் சொந்தமாக பழைய பேருந்து நிலையம் அருகில், புதிய பேருந்து நிலையம், சந்தை சாலை, காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 450 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வாடகையைவிட தற்போது சுமார் 10 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டு, நகராட்சியிலிருந்து வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    இது தொடர்பாக ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் கடந்த 26-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், வேலூர் நகராட்சி மண்டல இயக்குநர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், நகராட்சி ஆணையாளர் கமலக்குமாரியிடம் வியாழக்கிழமை ஆரணி நகராட்சி கடைகளின் வியாபாரிகள் நலச் சங்கச் செயலர் குருநாராயணன், பொருளர் எம்.முனுசாமி, துணைத் தலைவர் ஜி.செல்வராஜ், இணைச் செயலர் செங்கீரன், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி சுபானி உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், இதுகுறித்து
    உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai