சுடச்சுட

    

    இரு ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர்த் திட்டப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 31st March 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆரணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
    இதையடுத்து, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் தச்சூர், தெள்ளூர், இராமசாணிகுப்பம், அய்யம்பாளையம் உள்ளிட்ட 8 பகுதிகளில் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 பணிகள் முடிவடைந்துள்ளன. 3 பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும், மேற்குஆரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை இல்லாத வீடுகள் 6,600 என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4,400 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் கட்டி முடிக்கப்படும்.
    ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் மொழுகம்பூண்டி, ஆதனூர், மொரப்பந்தாங்கல், இரும்பேடு, அரியப்பாடி, நேத்தபாக்கம் உள்ளிட்ட 8 பகுதிகளில் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 2 இடங்களில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை இல்லாத வீடுகள் 3,100 என கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 1,600 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்தார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.எஸ்.குமார், சுப்பிரமணி, பரணிதரன் ஆகியோர் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai