சுடச்சுட

    

    போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பின்னர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது: தேசிய ஊரக வேலை திட்டத்தில் மழைநீர் கால்வாய்களில் தடுப்பணை அமைத்து பணித்தள பொறுப்பாளர்கள் தூர்வார வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை குறித்து பதிய வேண்டும் என்றார்.
    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திலகவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai