சுடச்சுட

  

  கனவை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

  By DIN  |   Published on : 31st March 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நம்முடைய எதிர்காலக் கனவை நனவாக்க, மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அறிவுரை கூறினார்.
  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2013 - 14ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 1,223 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
  நான் பள்ளிப்படிப்பு படிக்கும்போதே மாவட்ட ஆட்சியராக வேண்டும் என கனவு கண்டேன். இதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வந்தேன்.
  தொடர் முயற்சியின் பலனாக தற்போது ஆட்சியராக உள்ளேன். பணம், பதவிக்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், கனவு காண முக்கியத்துவம் தருவதில்லை. இப்போது கனவு காணவில்லை என்றால், எதிர்காலத்தில் எல்லோரும் வருத்தப்பட வேண்டும்.
  நாம் கணவு காணும் விஷயங்களை எல்லாம் எளிதாக அடைய முடியாது. கனவை நனவாக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். கனவுக்கு இலக்கு கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் கனவு காணலாம் என்றார்.
  விழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai