சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
  திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கிறார். இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் கூலித் தொழிலாளி சின்னராஜ் (45).
  சிறுமியின் பெற்றோர் புதன்கிழமை வேலைக்குச் சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சின்னராஜ் ஆசை வார்த்தைகள் கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியிடம் பொதுமக்கள் விசாரித்தனர்.
  அப்போது, சின்னராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் சின்னராஜை பிடித்து அடித்து, உதைத்தனர். பின்னர், அவரை மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து சின்னராஜை கைது செய்தனர்.
  மேலும், சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட சின்னராஜ், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai