Enable Javscript for better performance
செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் இந்தியன் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி, புதிய நிர்வாகிகள் தேர்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
    செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலர் இராதாகிருஷ்ணன் வரவேற்றதுடன், செஞ்சிலுவைச் சங்க உறுதிமொழியை வாசித்தார்.
    மாவட்ட செஞ்சிலுவைச் சங்க புரவலரும், ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவருமான வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் இந்திரராஜன், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்ததுடன், புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்தார்.
    இதில், செங்கம் வட்ட இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத் தலைவராக எஸ்.வெங்கடாஜலபதி, செயலராக ம.தனஞ்செயன், பொருளராக ஆதவன், நிர்வாக செயலராக சர்தார்ரூல்லா, செயற்குழு உறுப்பினர்களாக சங்கர், வழக்குரைஞர் செல்வம், முன்னூர்மங்கலம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி, டாக்டர் வெற்றிக்கனி, சத்யம் கல்லூரி விரிவுரையாளர் பிரகாஷ், ஆசிரியர் செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கப் பொருளர் நாகராஜன், செங்கம் வட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஷேக்தாவூத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai