சுடச்சுட

  

  தண்டராம்பட்டு அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டம்

  By DIN  |   Published on : 31st March 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தண்டராம்பட்டு அருகே  அரசுப் பேருந்து சேவையை  மீண்டும் செயல்படுத்தக் கோரி, அரசுப் பேருந்தை புதன்கிழமை இரவு சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு, தரடாப்பட்டு, துரிஞ்சல் மரம் வழியாக கண்ணக்குறுக்கை கிராமத்துக்கு கடந்த 2007-ல் பேருந்து விடப்பட்டது. அப்போதைய திமுக அமைச்சர் எ.வ.வேலு, இந்தப் பேருந்து வழித்தடத்தை தொடக்கி வைத்தார்.
  இந்தப் பேருந்து பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்நிலையில், திடீரென கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது.
  எனவே, அரசுப் பேருந்து சேவையை  மீண்டும் செயல்படுத்தக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், பேருந்து இயக்கப்படவில்லை.
  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை இரவு தரடாப்பட்டு வரை வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மீண்டும் துரிஞ்சல் மரம் வழியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai