சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பைக்குகள், ரூ.16,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
  வானாபுரம் காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். வானாபுரம் - எடக்கல் சாலையில் அவர்கள் சென்றபோது, அங்குள்ள மறைவிடத்தில் பணம் வைத்து சூதாட்டம் அடிக்கொண்டிருந்த கும்பலை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
  விசாரணையில், பிடிபட்டவர்கள் வானாபுரத்தை அடுத்த பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (63), பாலசுப்பிரமணி (53), தசரதன் (39), பழனி (42), சங்கர் (44), ஏழுமலை (62), செல்வராஜ் (51), ரமேஷ் (36), ஏழுமலை (52) என்பது தெரியவந்தது.
  பின்னர், அவர்கள் 9 பேரையும் போலீஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.16,500, 5 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai