சுடச்சுட

  

  பழங்குடியினர் சாதிச் சான்று கோரிமலைக்குறவன் சமூகத்தினர் நூதனப் போராட்டம்

  By DIN  |   Published on : 31st March 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழங்குடியினர் சாதிச் சான்று கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மலைக்குறவன் சமூகத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  செய்யாறு வட்டம், செங்கம்பூண்டி கிராமத்தில் 100 ஆண்டுகளாக 11 குடும்பங்களைச் சேர்ந்த மலைக்குறவன் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்று கோரி, தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செய்யாறு சார் - ஆட்சியர் அலுவலகம், செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை மனு அளித்தனர்.
  இவர்களது மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர் வியாழக்கிழமை மாலை திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் எதிரே வி.சேட்டு தலைமையில் கே.பழனி, என்.இராமன் உள்பட ஏராளமானோர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  அப்போது, தங்களது கைகளில் கூடை, முறம், விலங்குகளைப் பிடிக்கப் பயன்படும் வலை உள்ளிட்ட பொருள்களை  வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ப.சுப்பிரமணியன், கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai