Enable Javscript for better performance
பாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தை விவசாயிகள் முற்றுக- Dinamani

சுடச்சுட

    

    பாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

    By DIN  |   Published on : 31st March 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி, செங்கத்தை அடுத்த செ.சொர்ப்பனத்தல் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
    செ.சொர்ப்பனத்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணவனூர், உச்சிமலைக்குப்பம், மேல்பெண்ணாத்தூர், கரியாப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க்கடன், தனிநபர் கடன், ஆடு, மாடு வாங்குவதற்கான கடன்கள் வழங்கக் கோரி, சுமார் 5 மாதத்துக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.
    ஆனால், இந்த சங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சங்கத் தலைவர் ஆகியோருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் விவசாயக் கடன், தனிநபர் கடன் வழங்கப்படுகிறதாம். மற்றவர்களுக்கு கடன்கள் வழங்கப்படுவதில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த விண்ணவனூர், உச்சிமலைக்குப்பம், மேல்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்பேரில், கடன் கோரி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளின் மனுக்களும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என சொர்ப்பனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சுமார் 3 மணி நேரமாக முற்றுகையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai