சுடச்சுட

    

    செங்கத்தில் வியாழக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையின் போது, அரசுப் பேருந்து மோதியதில் ஊர்க்காவல் படை வீரர் பலத்த காயமடைந்தார்.
    செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை செங்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாசாமி மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வடிவேல் (33) ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, பெங்களூருவில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்து வடிவேல் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் அவருக்கு கை, கால், தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல், பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai