சுடச்சுட

  

  செய்யாறு அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், டிராக்டர், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  வெம்பாக்கம் வட்டாட்சியர் க.பெருமாள், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர்கள் சுகுமாரன், வடிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பாதுரை, பச்சையப்பன் ஆகியோர் வியாழக்கிழமை காலையில் பிரம்மதேசம் புதூர் பகுதியில் மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  அப்போது, பாலாற்றுப் படுகையில் அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், அவர்களைப் பார்த்தவுடன் மணல் கடத்தலில் ஈடுப்பட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
  பின்னர், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு டிராக்டர், பொக்லைன் இயந்திரம் மற்றும் 20 யூனிட் மணல் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து, பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், லாரிகள் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும், பொக்லைன் இயந்திரம் பிரம்மதேசத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும், டிராக்டர் செய்யனூரைச் சேர்ந்த முனியன் என்பவருக்கும் சொந்தமானவை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai