சுடச்சுட

  

  108 ஆம்புலன்ஸ் உதவியாளர், ஓட்டுநர் பணி: திருவண்ணாமலையில் இன்று ஆள்கள் தேர்வு

  By DIN  |   Published on : 31st March 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
  திருவண்ணாமலை, வேங்கிக்காலில் பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 2 ஆண்டு டிப்ளமோ அல்லது மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஓராண்டு டிப்ளமோ, பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 19 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள 24 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மருத்துவ உதவியாளருக்கு மாதம் ரூ.12,360, ஓட்டுநர் பணிக்கு ரூ.11,760 சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆள் தேர்வு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai