Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

    By DIN  |   Published on : 01st May 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
    உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தக்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, 10 நாள்கள் நடைபெறும் வசந்த உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
    முதல் நாள் திருவிழா: முதல் நாளான சனிக்கிழமை காலை, மாலை வேளைகளில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பூ கொட்டிய குழந்தை பொம்மை: கோயில் தல விருட்சமான மகிழ மரம் அருகே வந்த உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சித்திரை வசந்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    தொடர் நிகழ்ச்சிகள்: தொடர்ந்து, இரவு வேளைகளில் கோயிலில் உற்சவர் வீதியுலாவும், உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்வும் நடைபெறும். வரும் 8-ஆம் தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு ஸ்ரீகோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
    வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மன்மத தகனம் வருகிற 8-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே நடைபெறும். இத்துடன் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவுபெறும்.
    விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai