Enable Javscript for better performance
அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: ஏ.சி.சண்முகம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: ஏ.சி.சண்முகம்

    By DIN  |   Published on : 02nd May 2017 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
    திங்கள்கிழமை ஆரணிக்கு வந்திருந்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளரும் நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும்.
    அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
    அதிமுக உருவானபோது அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
    அதிமுக உடைந்து செல்வதை நான் விரும்பவில்லை.
    தற்போதைய பிரச்னையால் அரசு நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. மக்கள் நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டும்.
    இந்தியாவில் வறட்சி, வெள்ளப் பெருக்கு மாறி மாறி ஏற்படுகிறது. எனவே, நதிகளை இணைக்க வேண்டும். விவசாயி அய்யாக்கண்ணுவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்தின் நலன் கருதி "நீட்' தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதனை சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களால்தான் எழுத முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
    மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்பு: ஆரணிக்கு வந்திருந்த ஏ.சி.சண்முகம் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்றார்.
    இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில், ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு சொற்பொழிவாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
    முன்னதாக, கோயிலுக்கு வந்த ஏ.சி.சண்முகத்துக்கு கோயில் விழாக் குழுத் தலைவர் கப்பல் இ.கங்காதரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
    கோயில் விழாக் குழுச் செயலர் கே.ஆர்.சண்முகம், புதிய நீதிக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ஜெயக்குமார், நகரச் செயலர் ஜி.ஏ.கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai