சுடச்சுட

  

  அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை  நியமிக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 02nd May 2017 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,500 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
  இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்ட அறிக்கை:
  தமிழகத்தில் 5,500 அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் கணினி பாடப் பிரிவு உள்ளது. இவற்றில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
  3,500 பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பல அரசுப் பள்ளிகளில் தகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.
  2013-ஆம் ஆண்டு தமிழகத்தின் 4,325 அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவைக் கொண்டுவர மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்கான நிதியை ஒதுக்கியது.
  ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கணினி அறிவியல் பாடத்தைக் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 7-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai