Enable Javscript for better performance
கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சிதிலமடைந்ததால் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பணிகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    இதனையொட்டி, கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் உள்ள சுவாமி சன்னதி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    இதில், கலசப்பாக்கம், கடலாடி, மேல்சோழங்குப்பம்,வில்வாரணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai