Enable Javscript for better performance
சதுரங்க குத்துச்சண்டை போட்டி:திருவண்ணாமலை பள்ளி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    சதுரங்க குத்துச்சண்டை போட்டி: திருவண்ணாமலை பள்ளி முதலிடம்

    By DIN  |   Published on : 02nd May 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவிலான சதுரங்க குத்துச்சண்டை போட்டியில் திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி முதலிடம் பிடித்தது.
    சர்வதேச அளவிலான சதுரங்க குத்துச்சண்டை அமைப்பு சார்பில், கொல்கத்தாவில் அண்மையில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சதுரங்க குத்துச்சண்டை போட்டியில் திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி எம்.அக்சயா, கேடட் பிரிவில் பங்கேற்று சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.
    போட்டியில் வென்ற மாணவியை பள்ளித் தலைவர் ஆர்.குப்புசாமி, பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வர் எஸ்.லதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள்
    பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai