Enable Javscript for better performance
சாலை விபத்தில் மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் உயிரிழந்தார்.
    செய்யாறு மார்க்கெட் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் பார்த்திபன் (15). இவர், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
    இந்த நிலையில் சனிக்கிழமை இவர் செய்யாறு ஞானமுருகன் பூண்டி பகுதிக்கு பைக்கில் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, செய்யாறு ஆற்று மேம்பாலம் பகுதியில் முன்னே சென்ற காரை முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.
    இதில், நிலை தடுமாறி விழுந்த அவர் மீது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    இதுகுறித்து அவரது தந்தை வேலாயுதம் செய்யாறு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து
    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai