Enable Javscript for better performance
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: சாலை மறியலுக்கு முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பினர்.
    செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் ஊராட்சியில் மூன்று தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் ஒரே சிறு மின் விசை தொட்டியில் தண்ணீர் எடுத்து வருகின்றனராம். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு இரண்டு குடங்கள் வீதம் தண்ணீர் பிடித்து வந்துள்ளனர்.
    இந்த நிலையில் திங்கள்கிழமை சிலர் அதிக குடங்களை வைத்துத் தண்ணீர் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை சிலர் கண்டித்துள்ளனர். இதனால், பெண்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டதாம்.
    இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர். தகவலறிந்து வந்த செங்கம் டி.எஸ்.பி. ஷாஜித்தா, ஒன்றிய ஆணையாளர் கருணாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் சில தினங்களில் அந்தப் பகுதிக்குக் கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai