சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜனுக்கு தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டது.
  தமிழகத்தில் தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
  இந்த விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்ச் செம்மல் விருது மற்றும் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார்.
  செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் (பொ) இரா.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் (பொ) கோ.விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai