சுடச்சுட

  

  மகா சத்தியநாதேஸ்வரர் கோயிலில் மே 10-இல் திருவாசகம் முற்றோதல்

  By DIN  |   Published on : 02nd May 2017 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாம சுந்தரி உடனமர் மகா சத்தியநாதேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல், 108 குத்துவிளக்குப் பூஜை, 8-ஆவது ஆண்டு சித்ரா பெளர்ணமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இதனையொட்டி, காலை 8 முதல் மாலை 4 மணி வரை திருவாசகம் முற்றோதல், சிவனடியார்கள் திருக்கூட்டம், மாலை 5 முதல் 6 மணி வரை குத்துவிளக்குப் பூஜை, மாலை 6 முதல் இரவு 7 மணி வரை பெளர்ணமி சிறப்பு அபிஷேகம், மங்கல ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  
   ஏற்பாடுகளை சோழவரம் ஆன்மிக அறக்கட்டளை தலைமை அறங்காவலர் ஜெ.சங்கர் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai