சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், மலமஞ்சனூர் கிராமத்தில் நீடித்த நிலையான மானாவரி மேம்பாட்டுத் திட்டச் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநில வேளாண் துறை ஆணையர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி, மலமஞ்சனூர் புதூர், மோத்தக்கல், ரெட்டியார்பாளையம், புதூர்செக்கடி, நாராயணகுப்பம், ஆத்திப்பாடி, பெருங்குளத்தூர், போந்தை உள்ளிட்ட கிராமங்களில் நீடித்த நிலையான மானாவாரித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  இந்தத் திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு வட்ட கிராமங்களில் சுமார் 1,000 ஹெக்டரில் மானாவரி நிலத் தொகுப்புத் திட்டம் நடைபெறுகிறது.
  இந்தத் திட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் உழவுப் பணி, தேவையான விதைகளுக்கு 50 சதவீதம் மானியம், மழைநீர் தேக்க சிறிய அணைகள் கட்டப்படும்.
  குறைவான அளவு நீர் உள்ள பகுதிகளில் சொட்டு நீர், தெளிப்பு நீர் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
  இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை.
  விவசாயிகள் அனைவருக்கும் மானியம் முறையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில ஆணையரிடம் புகார் கூறினர்.
  விவசாயிகளுக்கு அரசின் மானியங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வேளாண் துறை ஆணையர் தட்சிணாமூர்த்தி உறுதியளித்தார்.
  வேளாண் இணை இயக்குநர் செண்பகராஜ், திருவண்ணாமலை ஊரக டி.எஸ்.பி. தேவநாதன், வேளாண் துணை இயக்குநர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai