சுடச்சுட

  

  ஆரணியை அடுத்த எஸ்.வி.நகர் கால்நடை மருத்துவமனையில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
  இங்கு உலர் தீவனமான வைக்கோல் கிலோ ஒன்றுக்கு ரூ. 2 வீதம், 105 கிலோ வரை பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
  இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார்.
  அப்போது அவர் கூறியதாவது: இந்தத் திட்டம் கடந்த ஏப்ரல் 1 முதல் செயல்படுகிறது. இதுவரை சுமார் 40 ஆயிரம் கிலோ உலர் தீவனம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார். கால்நடை மருத்துவர் நிர்மலா, அதிமுக முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், மாவட்ட பாசறை செயலர் ஜி.வி.கஜேந்திரன், பேரவை நிர்வாகி பாரிபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai