Enable Javscript for better performance
முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார், திமுக முன்னாள் ஒன்றியத் துணைச் செயலர் ஆதி, பொறியாளர் பிரிவு ஒன்றிய அமைப்பாளர் எஸ்.பிரபு உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று முனீஸ்வரனை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai