சுடச்சுட

    

    மே தின விழாவையொட்டி, திருவண்ணாமலையில் லாரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்ற 37-ஆவது ஆண்டு மே தின பேரணி நடைபெற்றது.
    திருவண்ணாமலை மண்டித் தெருவில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு, சங்கத் தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். செயலர் எம்.கே.கரிகாலன், பொருளாளர் எஸ்.தேவேந்திரன், சங்கத்தின் கெளரவத் தலைவர் எம்.தண்டபாணி, துணைச் செயலர் எம்.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    துணைத் தலைவர் பி.கோட்டீஸ்வரன் வரவேற்றார். ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வி.தனுசு, சங்கக் கொடியை ஏற்றினார். ஜே.பி.ஏ. குரூப் தலைவர் எம்.இ.ஜமாலுதீன் பேரணியைத் தொடக்கி வைத்தார்.
    காமராஜர் சிலை, கடலைக் கடை சந்திப்பு, தேரடி வீதி, காந்தி சிலை வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.
    பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், சங்கக் கட்டடம் அருகே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.
    அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.பிச்சாண்டி, செயலர் எஸ்.முரளிதரன், சிஐடியு மாவட்டத் தலைவர் ச.அப்பாசாமி, மாவட்டச் செயலர் இரா.பாரி, சட்ட ஆலோசகர் எம்.ஜெயபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
    அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில்...: இதேபோல திருவண்ணாமலை, தேனிமலை பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
    தொமுச தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில தொமுச பேரவைச் செயலர் க.சவுந்தரராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.திருமலை, ஆர்.ரங்கநாதன், இணை பொதுச் செயலர்கள் எம்.சரவணன், ஆர்.மலைவாசன், அமைப்புச் செயலர் கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இணைச் செயலர்கள் வி.ஏழுமலை, வி.ரகு, பணிமனை செயலர்கள் ஆர்.சேகர், ஆர்.மனோகரன், வெங்கடேசன், பத்மநாபன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    மற்ற இடங்களில்...: திருவண்ணாமலை கரிகாலன் தெருவில் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 44-ஆவது ஆண்டு மே தின கொடியேற்று விழா சங்கக் காப்பாளர் ஜி.மணி தலைமையில் நடைபெற்றது.
    இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
    வந்தவாசியில்...: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வந்தவாசி கோட்டம் சார்பில், வந்தவாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற மே தின விழாவுக்கு கோட்டத் தலைவர் கோ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெ.இராஜசேகர் மே தினக் கொடியை ஏற்றினார். திருவண்ணாமலை துணைத் தலைவர் ஆ.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் அ.ஏ.அருணாசலம், கோட்டச் செயலர் சி.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அதேபோல, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், வந்தவாசி நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு கிளைத் தலைவர் ஜெ.மதுரைவீரன் தலைமை வகித்தார். ஜி.இந்திராணி மே தினக் கொடியை ஏற்றினார். கிளைச் செயலர் சி.லோகநாதன், கிளைப் பொருளர் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai