Enable Javscript for better performance
லூர்து அன்னை ஆலயத்தில் நாளை பூப் பல்லக்கு பவனி- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் பூப் பல்லக்கு பவனி புதன்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
    இந்த ஆலயத்தில் கடந்த ஏப்ரவ் 23-ஆம் தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி பல்வேறு பங்குத் தந்தையர்களால் நடைபெற்று வருகிறது.
    ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லூர்து அன்னையின் பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஜெபமாலை ஜெபித்தபடி சென்றனர்.
    திங்கள்கிழமை (மே 1) இரவு தூய லூர்து அன்னை, புனித சம்மனேசு தேர் பவனி நடைபெற்றது. செவ்வாய்கிழமை (மே 2) இரவு வேலூர் மறைமாவட்ட ஆயர் சௌந்தரராஜூ தலைமையில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நற்கருணை ஆசீர், தூய லூர்து அன்னை மற்றும் இறைதூதர்கள் பவனி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூப் பல்லக்கு புதன்கிழமை (மே 3) இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai