Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு பண்ணை மேம்பாட்டு கருவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பண்ணை மேம்பாட்டு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
    செய்யாறு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ஏழுமலை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பண்ணை மேம்பாட்டுக் கருவிகளை வேளாண் இணை இயக்குநர் மீ.க.செண்பகராஜ் வழங்கினார். வேளாண் துணை இயக்குநர் கோ.கண்ணகி, நீர்வடிப் பகுதி சங்கத் தலைவர்கள், பயனாளிகள் குழு உறுப்பினர், விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீர்மேலாண்மை உறுப்பினர்கள் வி.ஏழுமலை, ஏ.செல்வி, எம்.ரமேஷ், எம்.அண்ணாமலை, ஆர்.நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai