சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், சோ.நம்மியந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜெய்சங்கர், வட்டாட்சியர் சுகுணா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் குமரேசன், தனி அலுவலர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தாய் திட்டம், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
  மேலும், ஊராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்கப்பட்டது.
  அப்போது, கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, நகரப் பகுதிகளில் இருந்து கிராமத்துக்கு பேருந்துகளை இயக்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கிராம மக்கள் பேசினர். இதற்குப் பதிலளித்த ஆட்சியர் மு.வடநேரே, கிராமத்துக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.
  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, சீனுவாசன், குருமூர்த்தி, அருள்செல்வம் ஒன்றியப் பொறியாளர்கள் சிவக்குமார், ராஜ்குமார், இந்திரா காந்தி மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 860 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai