சுடச்சுட

    

    கார் விபத்தில் கூட்டுறவுச் சங்கச் செயலர் சாவு: 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்

    By DIN  |   Published on : 03rd May 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் கூட்டுறவுச் சங்கச் செயலர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.
    இந்தச் சங்கத்தின் செயலராக வேலை செய்து வந்தவர் வெங்கடேசன் (46).
    இவரது சகோதரிகள் அபிதகுஜாம்பாள் (39), இந்திரா (38).
    சகோதரிகளை மருத்துவ சிகிச்சைக்காக வெங்கடேசன் திங்கள்கிழமை காரில் சென்னைக்கு அழைத்துச் சென்றார். வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் காரை ஓட்டினார்.
    பின்னர், சிகிச்சை முடிந்து அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வானாபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  கார் ஓட்டுநர் சுந்தரராஜன், அபிதகுஜாம்பாள், இந்திரா ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    பின்னர், தீவிர சிகிச்சைக்காக அபிதகுஜாம்பாள், சுந்தரராஜன் ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் இறந்த வெங்கடேசனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
    விபத்து குறித்து தண்டராம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai