Enable Javscript for better performance
சாலை விபத்தில் பெண் சாவு: 2 பேர் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி அருள்முருகன் (27). இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சென்றார்.
    மொபெட்டில் உறவினர்கள் தருமன் மனைவி லட்சுமி (46), ஜெய்சங்கர் மனைவி மீனா (25) ஆகியோரை அவர் உடன் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலை - சேரியந்தல் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இரவு லட்சுமி உயிரிழந்தார். மீனா, அருள்முருகன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai