Enable Javscript for better performance
சாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
    போளூரை அடுத்த படவேடு ஊராட்சி, ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரச்சிம்மன் (30), ஏழுமலை (32). இவர்கள் இருவரும் போளூரை அடுத்த சோமந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பைக்கில் சென்றனர்.
    வசூர் செல்லியம்மன் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை அவர்கள் முந்திச் செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வீரச்சிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஏழுமலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து போளூர் போலீஸார் வழ்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai