சுடச்சுட

    

    செங்கத்தில் குடிநீர் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 03rd May 2017 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் பகுதியில் குடிநீர் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
    செங்கம் பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் பழுதடைந்துள்ள கைப்பம்புகள், ஆழ்துளை கிணறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.  செங்கம் சுற்றுப்புற பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இதேபோல, செங்கம் நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறிய அளவிலான குடிநீர்த் தொட்டிகளில் இருந்து இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் குடிநீர் திருடப்பட்டு,விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    கூட்டத்தில் வட்டாட்சியர்கள் உதயகுமார், (சமூக பாதுகாப்புத் துறை) ரேணுகா, (ஆதிதிராவிடர் நலத் துறை) முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், நில அளவை அலுவலர் மோகன்ராஜ் மற்றும் விவசாயிகள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai