சுடச்சுட

    

    டாஸ்மாக் கடையை உடைத்து மதுப் புட்டிகளுக்குத் தீ வைப்பு: 9 பேர் கைது

    By DIN  |   Published on : 03rd May 2017 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மதுப் புட்டிகளை பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    ஆரணி - மலையாம்பட்டு கிராம சாலையில் முள்ளிப்பட்டு பகுதியில் அண்மையில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலையாம்பட்டு, புங்கம்பாடி, நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை கடை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள், மூடப்பட்டிருந்த அந்த மதுக் கடையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த மதுப் புட்டிகளை வெளியே எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்.
    தகவலறிந்த ஆரணி நகர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று எரிந்த நிலையிலும், உடைந்த நிலையிலும் கிடந்த மதுப் புட்டிகளை கைப்பற்றினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சுதாகர் (43), லோகேஷ் (28), பெருமாள் (76), கோட்டீஸ்வரன் (36), பாண்டியன் (36), ஜனார்த்தனன் (31), ஜெயசீலன் (32), ஜீவா (31), கணேஷ் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
    போராட்டத்தின்போது, சேதப்படுத்தப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai