சுடச்சுட

  

  தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் எம்ஜிஆர்: முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேச்சு

  By DIN  |   Published on : 03rd May 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் எம்ஜிஆர் என்று முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் என்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலர் டி.மனோகரன் வரவேற்றார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். மாநில இளைஞரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் எம்ஜிஆர். அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா, தொழிலாளர்கள் நலன் கருதி சேவை நிதியை ரூ.ஒரு லட்சமாக உயர்த்தினார். அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது.
  பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த ஆட்சியே தொடர்ந்து 4 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஆட்சியைத் தொடருவோம் என்றார். கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் பி.அன்பழகன், இணைச் செயலர் எம்.நளினி மனோகரன், தலைமைக் கழகப் பேச்சாளர் ஏ.அமுதா அருணாச்சலம், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai