சுடச்சுட

    

    பொறியியல் படிப்புகளுக்கு இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி

    By DIN  |   Published on : 03rd May 2017 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி ஸ்ரீபாலாஜி  சொக்கலிங்கம் (எஸ்பிசி) பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் நீதிபதி இந்திரா காந்தி கலந்துகொண்டு, இணையதளம் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கும் வசதியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, எம்பிஏ துறைத் தலைவர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் வரவேற்றார்.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு கூறியதாவது: பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பும் வசதி கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக விண்ணப்பக் கட்டணத்தை இணையதள வங்கிச் சேவை மூலம் மட்டுமே செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளனர்.
    இந்நிலையில், பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆரணி பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில், எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் இணையதளம் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9095159152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆரணி வழக்குரைஞர் ஏ.சிகாமணி, கல்லூரி துறைத் தலைவர்கள் ராமசாமி, இளங்கோ, ரீகன், கார்த்திகேயன், சண்முகம், கந்தசாமி, விஜயகுமார், சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai