Enable Javscript for better performance
மணிகண்டன் சுவாமிக்கு 508 பால்குட அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஆதி அய்யப்பன் கோயிலில் உள்ள 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கு 508 பால்குட அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் கிராமம், உண்ணாமுலைபாளையத்தில் ஸ்ரீஆதி அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மாதந்தோறும் 1-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
    அதன்படி, திங்கள்கிழமை கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு ஸ்ரீஅரிபுத்திர சுவாமிகள் தலைமையில், 27 நட்சத்திர யாக குண்ட சாலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
    இதைத் தொடர்ந்து, மூலவர் ஆதி அய்யப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, ஜோதி ஏற்றும் விழா நடைபெற்றது.
    இரவு 8 மணிக்கு 508 பெண்கள் பால் குடம் ஏந்தி விநாயகர், அம்மன் சன்னதிகளில் வலம் வந்து 27 அடி உயர மணிகண்டன் சுவாமி பாதத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    இதில், வாழவச்சனூர், உண்ணாமுலைபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த
    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai