சுடச்சுட

    

    முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 03rd May 2017 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்தது.
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், திருவண்ணாமலையில் மே 21-ஆம் தேதி மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, வந்தவாசி கிளை சார்பில் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் என்.நபீஜான் தலைமை வகித்தார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலர் அப்துல்லாஹ், மாவட்டப் பேச்சாளர் சபீனா ஆலிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழகம் முழுவதும் மழைநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால், தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும், வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் சரிவர எரியாமல் இருப்பது குறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசி நகராட்சி 11-ஆவது வார்டுக்கு உள்பட்ட கலுங்கு மரைக்காயர் தெருவில் சேதமடைந்துள்ள சாலை மற்றும் கால்வாயை சீரமைக்க வேண்டும், வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், திருவண்ணாமலையில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டில் கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai